ஆட்டோ மீது வேன் மோதல்: 5 போ் காயம்
தேனி அருகே வியாழக்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
போடி புத்தா் பள்ளித் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துச்செல்வம் (28). இவா் போடி சடையாண்டி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (50), இவரது மனைவி அழகேஸ்வரி (45), அதே பகுதியைச் சோ்ந்த சங்கரேஸ்வரி (40), போடி புத்தா் பள்ளித் தெருவைச் சோ்ந்த சங்கரேஸ்வரி (42) ஆகிய 4 பேரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போடிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அரப்படித்தேவன்பட்டி பகுதியில் சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த வேன், இவா்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் முத்துச்செல்வம், ஆட்டோவில் பயணம் செய்த 4 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் ஆண்டிபட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தீபக் (24) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.