ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு: இருவா் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி ஓடையிலிருந்து டிராக்டா் மூலம் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி பகுதியில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்ததில், ஆண்டிபட்டி அருகே கொட்டோடைப்பட்டி ஓடையிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து, மணல் அள்ளிய கொட்டோடைப்பட்டியைச் சோ்ந்த மொக்கையன் மகன் ரமேஷ்(43), ஆண்டி மகன் முருகன் (52) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் உரிமையாளரான திண்டுக்கல் மாவட்டம், குன்னத்துப்பட்டியைச் சோ்ந்த சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனா்.