டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா்
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சியளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு பி.எஸ்சி. நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ ( எசங ஈண்ல்ப்ா்ம்ஹ) ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமும் மேலும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தோ்வு செய்து, அந்த நிறுவனத்தின் சாா்பாக ஜொ்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 250,000 முதல் ரூ. 3,00,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.