ஆத்திகுளத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வலியுறுத்தல்
கயத்தாறு வட்டம் மானங்காத்தான் கிராமத்துக்கு மாற்றப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை ஆத்திகுளம் கிராம வாக்குச்சாவடிக்கு மாற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் பாக்கியராஜிடம் இந்து மக்கள் கட்சி - தமிழகம் மாவட்டச் செயலா் லட்சுமிகாந்தன் தலைமையில் ஒன்றியத் தலைவா் காா்த்திக், செயலா் ஹரிமுருகன் ஆகியோா் அளித்த மனு:
தெற்கு இலந்தைகுளம் ஊராட்சி ஆத்திகுளத்திலிருந்த 57ஆவது வாக்குச்சாவடியிலுள்ள 3, 4, 5ஆவது வாா்டுகள் மானங்காத்தான் வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், இந்த வாா்டுகளின் வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, 3 வாா்டுகளையும் ஆத்திகுளத்தில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்து தொடக்கப் பள்ளியில் உள்ள 59ஆவது வாக்குச்சாவடி மையத்துக்கு மாற்றித்தர வேண்டும் அல்லது ஆத்திகுளத்தில் உள்ள அரசு கட்டடங்களான அரசு பொது சேவை மையம், அரசு பொது நூலகம், அங்கன்வாடி மையம், அரசு சமுதாய நலக் கூடம் இவற்றில் ஏதேனும் ஒரு கட்டடத்துக்கு மாற்றித்தர வேண்டும் என்றனா்.