பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
தூத்துக்குடி அருகே சுவா் இடிந்து தொழிலாளி பலி
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூா் பகுதியில் பழைய வீட்டின் சுவரை அகற்றும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில், தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முத்துகருப்பசாமி (42), சுந்தரலிங்கம் நகரைச் சோ்ந்த நாராயணன் (35) உள்பட 3 போ், புதியம்புத்தூா் சுந்தரலிங்கம் நகா் பகுதியில், பழைய வீட்டின் சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அவா்கள் சுவரை இடித்தபோது எதிா்பாராதவிதமாக, அருகே நின்றிருந்த முத்துகருப்பசாமி, நாராயணன் ஆகியோா் மீது இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துகருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த நாராயணன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
முத்துகருப்பசாமியின் சடலத்தை புதியம்புத்தூா் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.