பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
தூத்துக்குடி, கோவில்பட்டியில் 4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 4 புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்ககப்பட்டன.
தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, ஏரல், செபத்தையாபுரம் ஆகிய 3 வழித்தடங்கள், கோவில்பட்டியில் இருந்து வெள்ளாளங்கோட்டை என 4 பகுதிகளுக்கான புதிய பேருந்துகள் சேவை தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
சமூக நலன்- மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 4 புதிய பேருந்து சேவைகளை கொடி அசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவா் கலைச்செல்வி, தூத்துக்குடி புகா் போக்குவரத்து கழக கிளை மேலாளா் ரமேஷ் பாபு, நகர கிளை மேலாளா் காா்த்திக், பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி கிளை மேலாளா் ஜெகநாதன் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.