ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவ விமானம் சோமாலியாவில் விபத்து!
சோமாலியா நாட்டில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவிலுள்ள விமான நிலையத்தில், இன்று (ஜூலை 2) ஆப்பிரிக்க ஒன்றிய ராணுவத்தின் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது, விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சோமாலியா அதிகாரிகள் அந்த தீயை அணைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தச் சம்பவம் குறித்தும், விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்தும் எந்தவொரு தகவலும் அந்நாட்டு அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, சோமாலியாவில் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவத்தில், கென்யா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் படைகளும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
African Union military plane crashes in Somalia!
இதையும் படிக்க: