ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் வாகனத்தை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனி நபரையோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.