ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதல்: 17 பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் திங்கள்கிழமை நேருக்கு நேர் மோதியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் ஆம்பூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது பேர்ணாம்பட்டில் இருந்து தோல் ஏற்றிக் கொண்டு ஆம்பூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்து மற்றும் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றம்
லாரி ஓட்டுநர் உபேஷ் மற்றும் பெண் தொழிலாளர்கள் ரஞ்சனி, சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அரசுப் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்து நடக்கும் முன்பே முன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.