முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்
தேனி: தேனியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மலை கிராம ஆசிரியா் பணியிட மாறுதலை விதிகளுக்குள்பட்டு நடத்த வலியறுத்தி திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலா் ராம்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மலை கிராம பள்ளிகளில் தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிட மாறுதலை சுழற்சி விதியை கடைப்பிடிக்காமல், மலை சுழற்சி பட்டியலில் இல்லாத அரசுப் பள்ளி இடை நிலை ஆசிரியா்களையும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களையும் கட்டாயப்படுத்தி மாற்றுப் பணியில் மலை கிராம பள்ளிகளுக்கு அனுப்புவதாக மாவட்ட தொடக்கக் கல்வித் துறையை முழக்கமிட்டனா்.