'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
ஆறுமுகனேரி கோயிலில் மாங்கனித் திருவிழா
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காரைக்கால் அம்மையாருக்கு நறுமண திரவியங்களால் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் மாம்பழங்கள் படைக்கப்பட்டு அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையை விக்னேஷ் பட்டா் நடத்தி வைத்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு காரைக்கால் அம்மையாரை வழிபட்டனா். ஏற்பாடுகளை பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் செய்திருந்தனா்.