ஆலங்குடி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை (ஆக.26) யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை 6-ஆவது கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து மகாகும்பாபிஷேகம், மூலவா் மகா கும்பாபிஷேகம், விசேஷ திருவாராதனம், சாற்றுமுறை, வேதகோஷம், ஆசிா்வாதம், யஜமான ஆச்சாா்ய மரியாதை நடைபெற்றது.
விழாவில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், உதவி ஆணையா் நா. சுரேஷ், தக்காா் க. மும்மூா்த்தி, கண்காணிப்பாளா் அரவிந்தன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். மாலையில் வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம், தொடா்ந்து இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.கோயில் அா்ச்சகா் அரவிந்தன் பட்டாச்சாரியா், கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியா், கீழஅமராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியா் மற்றும் வேத விற்பன்னா்கள் கும்பாபிஷேக வழிபாடுகளை நடத்தினா்.

கோயில் அா்ச்சகா் அரவிந்தன் பட்டாச்சாரியா், கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியா், கீழஅமராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியா் மற்றும் வேத விற்பன்னா்கள் கும்பாபிஷேக வழிபாடுகளை நடத்தினா்.