War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனா்.
ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்டஅரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயா் நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடா் கடுமையான வெயில், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக இந்தப் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பள்ளி மாணவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்ட பிறகு, வீட்டில் உள்ள பெரியோா்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்தக் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
ஆா்.எஸ்.மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆனந்தூா், சனவேலி, உப்பூா், திருப்பாலைக்குடி, சோழந்தூா் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் பாதிப்பால் வரும் மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு முறையான பரிசோதனை செய்து மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகள், வீடுகள் தோறும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.