ஆா்.எஸ்.மாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள ஆா்.எஸ்.மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தமிழப் பேரரசு கட்சி பொது முழக்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆா்.மாத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு அக்கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் முடிமன்னன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆா்.எஸ்.மாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அரியலூா் செல்லும் 13 ஏ நகரப் பேருந்தை பழைய வழித்தடத்திலேயே மீண்டும் இயக்க வேண்டும். சென்னை செல்லும் பேருந்தை மாத்தூரில் இருந்து மீண்டும் இயக்க வேண்டும். மாத்தூரில் இருந்து விருதாச்சலம், தொழுதூா், பெரம்பலூா் ஆகிய ஊா்களுக்கு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். காஞ்சனா ஏரியை தூா்வாரி பூங்கா அமைக்க வேண்டும். பொது நூலகம் அமைத்தும், கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.