செய்திகள் :

இங்கிலாந்தில் ஜடேஜாவின் தனித்துவமான சாதனை!

post image

இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இமாலய இலக்கை சேஸிங் செய்த முதல் ஓவரிலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோத்த கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை விக்கெட்டினை இழக்காமல் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 27) முடிவடைந்த நான்காம் டெஸ்ட்டிலும் ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் 6-ஆவது வீரராக களமிறங்கி 185 பந்துகளைச் சந்தித்து 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்தில் இந்திய அணியைச் சேர்ந்த ஒரு வீரர் 6-ஆவது வீரராக அல்லது அதற்கும் கீழ் நிலையில் களமிறங்கி, இரண்டு முறை சதம் விளாசியிருப்பது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Ravinda Jadeja is the first Indian to score two Test hundreds from No.6 or lower in England

ஆஸி. ஆதிக்கம்..! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணிக்கு தொடரும் சோகம்..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.Australia''s Caribbean cricket tour ends with a perfect record in T... மேலும் பார்க்க

லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு!

லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தனர்.Indian players meet with Indian embassy officials in London! இதையும் படிக்க : இங்கிலாந்தில் ஜடேஜாவின் தனித்துவமான சாதனை! மேலும் பார்க்க

முதல் முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் புதிய சாதனை!

இந்திய அணியின் பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: ரிஷப் பந்த் விலகல்; தமிழக விக்கெட் கீப்பர் அணியில் சேர்ப்பு!

எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய... மேலும் பார்க்க

இந்திய அணியின் முடிவு சரியே; ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்கள்!

போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ளக் கூறிய இங்கிலாந்தின் முடிவை ஏற்காமல் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது சரியே என முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளு... மேலும் பார்க்க