வாணியம்பாடி: மலைக் குன்றிலிருந்து சாலையில் சரிந்து விழுந்த ராட்சதப் பாறையால் பரப...
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்குகிறது.
நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகுகிறார்.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு தயாராக இருக்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சு பயிற்சியின்போது, அவரது இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
Squad Update: Nitish Kumar Reddy ruled out of the series. Arshdeep Singh ruled out of fourth Test
— BCCI (@BCCI) July 21, 2025
The Men’s Selection Committee has added Anshul Kamboj to the squad.
More details here - https://t.co/qx1cRCdGs0#TeamIndia#ENGvIND
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நிதீஷ் குமார் ரெட்டி விலகுகிறார். தாயகம் திரும்பவுள்ள அவர் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம்.
பந்துவீச்சு பயிற்சியின்போது, வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார். நான்காவது டெஸ்ட்டில் அர்ஷ்தீப் சிங் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அறிமுகப் போட்டியில் அசத்திய மிட்செல் ஓவன்; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!
Nitish Kumar Reddy, one of the Indian team's all-rounders, has been ruled out of the Test series against England.