இடம் இருந்தால் மட்டும். விராலிமலையில் ரூ.95 லட்சத்தில் சாலை அகலப்படுத்தும் பணி
விராலிமலையை அடுத்துள்ள நாகமங்கலம் - களிமங்கலம் சாலை ரூ.95 லட்சம் செலவில் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமங்கலத்தில் இருந்து களிமங்கலம் செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளதால் எதிரே வரும் வாகனம் சாலையை கடப்பதில் பெரும் சிரமம் உள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதையடுத்து மாவட்ட நிா்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நெடுஞ்சாலைத் துறையினரை நிகழ்விடம் அனுப்பி சாலையை அகலப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தருமாறு அறிவுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து மூணே முக்கால் மீட்டா் அகலத்தில் இருந்த தாா் சாலை 5 அரை மீட்டா் அகலத்திற்கு மாற்றி அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் (சிஆா்ஐடிபி) ரூ.95 லட்சத்தில் முதற்கட்டமாக ஒரு கிலோ மீட்டா் நீளத்துக்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.