செய்திகள் :

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!

post image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.8 பில்லியன் டாலராக சரிந்து 623.98 பில்லியன் டாலராக உள்ளது.

இந்த வீழ்ச்சியால் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பு 2.87 பில்லியன் டாலர் சரிந்து 533.13 பில்லியன் டாலராக நிலைபெற்றது. அதே வேளையில் தங்கம் கையிருப்பு 106 கோடி டாலா் அதிகரித்து 68.94 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு வரைதல் உரிமை (எஸ்.டி.ஆர்) 1 மில்லியன் டாலர் அதிகரித்து, 17.78 பில்லியன் டாலராக உள்ளது.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு 74 மில்லியன் டாலர் சரிந்து 4.12 பில்லியன் டாலராக உள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 10, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் 8.7 பில்லியன் டாலர் குறைந்து 625.87 பில்லியன் டாலராக உள்ளது.

இதையும் படிக்க: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிகர லாபம் 70% சரிவு!

விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு!

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த டிசம்பரில் முறையே 5.01 சதவீதம் மற்றும் 5.05 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

பன்முக சொத்து ஒதுக்கீட்டுத் திட்டம்: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்

இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... மேலும் பார்க்க

கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம்!

சென்னை: கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்படும் என்று மருந்துகள் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப... மேலும் பார்க்க

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிகர லாபம் 70% சரிவு!

புதுதில்லி: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், 70 சதவிகிதம் சரிந்து ரூ.719 கோடி ஆக உள்ளது.இதுகுறித்து நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு இதே க... மேலும் பார்க்க

இண்டிகோ நிறுவனத்தின் லாபம் 18% சரிவு!

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 2024 டிசம்பருடன் முடிவடைந்த 3 மாதங்களில் அதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,450.1 கோடியாக உள்ளது. இது சுமார் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாக நிறுவனம் தனது... மேலும் பார்க்க

நிஃப்டி 113.15 புள்ளிகள், சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தை வணிகத்தில், வார இறுதி நாளான இன்று நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்தும், சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்த நிலையில் வணிகம் நிறைவுற்றது.முன்னதாக, இன்றைய வணிகத்தின்போது, இரு பங்குச் சந்தைகளிலும் ச... மேலும் பார்க்க