இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!
ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எஃப் 31 வரிசை ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் செப். 12 அல்லது 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் புதிதாக ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்லது.
கீழே தவறி விழுந்தாலும் உடையாத வகையில், சேதம் ஏற்படாத வகையில் கவச உரையுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும், 7,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் இந்த வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஓப்போ ரெனோ வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் எஃப் 31 வரிசையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்கம், செயல்திறன் போன்றவற்றில் எஃப் 29 வரிசை ஸ்மார்ட்போனகளை விட மேம்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர்.
இரு ஸ்மார்ட்போன்களுமே 7,00mAh பேட்டரி திறனுடனும், சேதம் ஏற்படாத வகையில் 360 டிகிரி கவச உரையுடனும் தயாரிக்கப்படுகின்றன.
இதையும் படிக்க | ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 தள்ளுபடியா? அமேஸான் அறிவிப்பு