செய்திகள் :

இந்தியா-வங்கதேசம்: எல்லை படைகள் அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை

post image

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன.

தில்லியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் 55-ஆவது பிஎஸ்எஃப் மற்றும் வங்கதேச எல்லைப் படை (பிஜிபி) தலைமை இயக்குநா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை பிப்ரவரி 17 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா சாா்பில் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் தலைமையிலான குழுவும் வங்கதேசம் சாா்பில் பிஜிபி தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸ்ஸமான் சித்திக் தலைமையிலான குழுவும் பங்கேற்கவுள்ளது.

அப்போது பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் குடிமக்கள் மீது வங்கதேசத்தினா் நடத்தும் தாக்குதல்கள், எல்லையில் வேலி அமைப்பது, எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பது, ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை திட்டம் செயல்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

இதையடுத்து, இரு நாடுகளையொட்டிய எல்லையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்படவுள்ளதாக பிஎஸ்எஃப் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் பிஎஸ்எஃப் மற்றும் பிஜிபி இடையே வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவா் போராட்டத்தால் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்த பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின்கீழ் முதல்முறையாக இந்தியா வங்கதேசம் இடையே எல்லை விவகாரங்கள் சாா்ந்த பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இந்திய தூதருக்கு வங்கதேசமும் வங்கதேச தூதருக்கு இந்தியாவும் சம்மன் அனுப்பியதால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் சட்டவிரோதமாக வேலி அமைப்பதுடன் அங்கு வசிப்போரை கொலை செய்வதாக பிஎஸ்எஃப் மீது வங்கதேசம் குற்றஞ்சாட்டியது.

இந்தியா பதிலடி:

ஆனால் இந்திய-வங்கதேச எல்லையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களைத் தடுக்க, முறையான விதிகள் பின்பற்றப்பட்டே வேலி அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். இது குறித்து தில்லியில் உள்ள வங்கதேச தூதரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

அதேபோல், எல்லையில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக குடியிருப்புகளைக் கட்டி வரும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்பதாகவும், இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த பிறகே இவை குறைந்ததாகவும் பிஎஸ்எஃப் தெரிவித்தது.

மேலும் மேற்கு வங்கத்தையொட்டிய எல்லையில் படைக் குவிப்பு நடவடிக்கையில் வங்கதேசம் ஈடுபடுவதாகவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினா் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் பிஎஸ்எஃப் குற்றஞ்சாட்டியது.

3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

3 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுவித்தனர். காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கட... மேலும் பார்க்க

தெற்கு சைபீரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷியாவின் அல்தாய் குடியரசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷிய நிலஅதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ரஷிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், இந்த நிலநடு... மேலும் பார்க்க

பணிநீக்க நடவடிக்கையில் துரிதம் காட்டும் அமெரிக்க அரசு!

அமெரிக்காவில் பணிநீக்க நடவடிக்கையிலும் அமெரிக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவில், குறிப்பாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் மற்றும் சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகள... மேலும் பார்க்க

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள... மேலும் பார்க்க

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும்... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விம... மேலும் பார்க்க