மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!
இந்திய கம்யூ. ஆலோசனைக் கூட்டம்
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பாபுஜி பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினாா்.
இதில், நாகையில் ஏப்ரல் மாதம் 3 நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது; தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி கோரி 1-இல் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் தங்கையன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.