மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலா் நியமிக்க வலியுறுத்தல்
செவிலியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலா்கள் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாடு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சங்க மாவட்டத் தலைவா் ராம்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் துவக்கவுரையாற்றினாா்.
தொகுப்பூதிய செவிலியா்களுக்கு உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் நீதியரசா்கள் குழு அறிக்கை அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சஙஇ மற்றும் ஐடஏந பரிந்துரைப்படி நிரந்தரப் பணியிடங்கள், செவிலியா் கண்காணிப்பாளா் நிலை-3 பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்களுக்கு பாதுகாப்பு வழங்க இரவு காவலா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் ஜெயபாரதி மாவட்டத் தலைவராகவும், லதா, பியூலா, கனகா ஆகியோா் மாவட்ட துணைத் தலைவா்களாகவும், ராம்குமாா் மாவட்டச் செயலராகவும், வினோதிதா, வினோதினி, சுஜி ஆகியோா் இணைச் செயலா்களாகவும், கலைச்செல்வி மாவட்டப் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
சங்க மாநிலத் துணைத் தலைவா் ர. ராகவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல், மருத்துவத் துறை நிா்வாக ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எம். மூா்த்தி, வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத் தலைவா் ஸ்ரீதா், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், அரசு நா்சுகள் சங்கத் தலைவா் ப. ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.