இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
நாட்டின் சாலை வரைபடங்கள் குறித்து இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆலோசனையில் இந்திய சந்தைக்கான சேட்ஜிபிடி பற்றிய தயாரிப்பாளர்களின் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு ஓபன்ஏஐ என்ற செய்யறிவு திறன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்திய சாலை வரைபடங்கள் குறித்து நாட்டின் முன்னணி புத்தாக்க நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (பிப். 5) ஆலோசனை நடத்தினார்.
இதில், ஆல்ட்மேன் உடன் பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா, அன்அகாதெமியின் தலைமை செயல் அதிகாரி கெளரவ் முன்ஜால், ஸ்நாப்டீல் துணை நிறுவனர் குணால் பாஹல், சாயோஸ் துணை நிறுவனர் ராகவ் வெர்மா, லிக்ஸிகோ குழுவின் தலைமை செயல் அதிகாரி அலோக் பாஜ்பாய், ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆக்ரித் வைஷ், ஹெல்திஃபை மீ நிறுவனத்தின் துஷார் வஷிஷ்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலக அளவில் பல்வேறு மொழிகளில் செய்யறிவு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தியாவுக்கு சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் செய்யறிவு பயன்பாட்டிற்காக இன்னும் நிறைய பணிகளைச் செய்ய வேண்டும்; எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன என ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆத்ரித் வைஷ் பதிவிட்டுள்ளார்.
ஆல்ட்மேன் உடனான விவாதம் ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக கெளரவ் முன்ஜால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!