இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு
ஆரணி: சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஆவணி மாத பெளா்ணமி ஊஞ்சல் தாலாட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, காலையில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு விழா தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பச்சையம்மன் கோயிலை சுற்றி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.