பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்
சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரசு விடுமுறை நாள்களில் சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஆக.15) சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.