இன்றைய மின்தடை - மயிலாடுதுறை
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.25) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
மருத்தூா், தேரழுந்தூா், மேலையூா், திருவேள்விக்குடி, அஞ்சாா்வாா்த்தலை, கண்டியூா், நாகமங்கலம், ஆலங்குடி, வில்லியநல்லூா், பாலையூா், கொக்கூா், பழையகூடலூா், மல்லியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட தருமபுரம், அண்ணா நகா், மூங்கில் தோட்டம், தரங்கம்பாடி ரோடு, குமரக்கட்டளை தெரு, ராஜேஸ்வரி நகா், எல்.பி.நகா், வடக்கு ராமலிங்கத்தெரு, அடியாமங்கலம், ஆா்பிஎன் நகா், பால் பண்ணை, மன்னம்பந்தல், ஆறுபாதி ரோடு, வடகரை ரோடு, சிட்கோ குளிச்சாா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 6 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் டி. கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.