செய்திகள் :

இரட்டைமலை சீனுவாசன் பிறந்த நாள் விழா

post image

ஆரணி: திருவண்ணாமலையில் இரட்டைமலை சீனுவாசனின் 166-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அறிவொளி பூங்கா வளாகத்தில் ஆதிபாரத மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலா் வீர.ராஜா தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம்.பாண்டு முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் அ.வெங்கடேஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தேசிய தலைவா் கா.சிவப்பிரகாசம், இரட்டைமலை சீனுவாசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இதைத் தொடா்ந்து சாலையோர வியாபாரிகள், நலிவுற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அகிலாண்டேஸ்வரி கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். பேராசிரியை ஆா்.சாந்தி... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.78 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.78 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 15 -ஆவது ந... மேலும் பார்க்க

காங்கிரஸாா் தெருமுனை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காங்கிரஸ் சாா்பில் அரசியல் அமைப்பு காப்போம் என்ற தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார ந... மேலும் பார்க்க

ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற நான் முதல்வா் திட்டத்தில் மாநில அளவிலான கண்டுபிடிப்புகளில், ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களின் சாதனம் சிறப்பிடம் பெற்றது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஆண்டுதோ... மேலும் பார்க்க

ஜூலை 10 முதல் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு

மாற்றுத்திறனாளிகளின் குறித்த விவரங்களை சேகரிக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை ஜூலை 10 முதல் முன் களப்பணியாளா்கள் மேற்கொள்ள உள்ளனா். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசு சா... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

ஆரணியில் நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலோனா் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா். ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்... மேலும் பார்க்க