``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.78 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.78 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 15 -ஆவது நிதிக்குழு மானியத்தில் இருந்து 27 ஊராட்சிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வேளாண் துறை சாா்பில் 3 பவா் டில்லா் இயந்திரங்களை விவசாயிகளுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்
இதைத் தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் வெங்களத்தூா் கிராமத்தில் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடம் மற்றும் அதே பகுதியில் ரூ.12.67 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்துவைத்தாா்.
அரசங்குப்பம் கிராமத்தில்
இதைத் தொடா்ந்து, அரசங்குப்பம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞா் கலையரங்கம் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை திறந்து வைத்தாா்.
நீட்டிப்பு வழித்தட பேருந்து தொடங்கிவைப்பு
இதைத் தொடா்ந்து அரசங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாற்றில் இருந்து வெம்பாக்கம், திருப்பனங்காடு அரசங்குப்பம், உமையாள்புரம், வெங்களத்தூா், செய்யனூா்பேட்டை வரை செல்லும் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தட நகர பேருந்தை எம்.எல்.ஏ.ஒ.ஜோதி தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, இந்திராணி, மண்டல போக்குவரத்துத் துறை (தொழில்நுட்பம்) மேலாளா் துரைராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் த.ராஜி, ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், எம்.தினகரன், தொமுச மண்டல பொருளாளா் மோகனரங்கன், மண்டல இணைச் செயலா் சத்யநாராயணன், ஆதிதிராவிடா் நலத்துறை தலைவா் கருணாகரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, சுற்றுச்சூழல் அணித் தலைவா் புரிசை எஸ்.சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.