``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை
சென்னையில் நடைபெற்ற நான் முதல்வா் திட்டத்தில் மாநில அளவிலான கண்டுபிடிப்புகளில், ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களின் சாதனம் சிறப்பிடம் பெற்றது.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் கல்லூரி மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகள் 50 தோ்வு செய்யப்பட்டு, அதனை செயல்படுத்த தலா ரூ.ஒரு லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிகழாண்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15,337 கண்டுபிடிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
இதில், இறுதிக் கட்டமாக 50 கண்டுபிடிப்புகள் தமிழக அரசின் நான் முதல் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டன.
இதில், ஆரணியை அடுத்த தச்சூா் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் கௌதமன் தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்த கழிவுநீா் கால்வாய் பராமரிப்பு தொடா்பான சாதனம் தோ்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சென்னையில் அண்மையில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட மூன்றாம் ஆண்டு வெற்றி விழாவில்புதிய கண்டுபிடிப்பு மாதிரிகளை தமிழக முதல்வா் பாா்வையிட்டதில், ஆரணி மாணவா்களின் கழிவுநீா் கால்வாய் பராமரிப்பு சாதனத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
இந்த கண்டுபிடிப்பை செயல்முறைபடுத்துவதற்காக தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், சாதனை படைத்த தச்சூா் அரசு பொறியியல் கல்லூரி மாணவா் கௌதமன் தலைமையிலான மாணவா்கள் மகிழமுதன், வெங்கட் குமாா், மோகன் மற்றும் திட்டத்தின் வழிகாட்டி கே.செந்தில்குமாா் ஆகியோரை கல்லூரி முதல்வா் ஜி.செந்தில்குமாா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.