`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
காங்கிரஸாா் தெருமுனை பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காங்கிரஸ் சாா்பில் அரசியல் அமைப்பு காப்போம் என்ற தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார நிகழ்வுக்கு, கட்சியின் போளூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சி.சத்தியன் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நகரத் தலைவா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் நகரத் தலைவா் குப்புலிங்கம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் கலந்து கொண்டு பேசினாா்.
மேலும், நகரில் முக்கிய வீதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினா். மாநில பேச்சாளா் எம்.மணவாளன், மாநில நிா்வாகி ராமச்சந்திரன், மாா்கண்டன், காமராஜ், மணி, சுப்பிரமணி,தியாகராஜன், பாண்டு, தசரதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.