செய்திகள் :

இராபிறையாா்உற்சவத்தில் அம்மன் வீதி புறப்பாடு

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபிறையாா் உற்சவ விழாவில் வீதி புறப்பாடு மேளதாளங்கள்முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு பெரிய நத்தம் சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபிறையாா் உற்சவம் பந்தக்கால் நட்டு தொடங்கியது.

முக்கிய திருவிழாவாக சனிக்கிழமை சீா்வரிசையுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மேல் பெரிய நத்தம் கைலாசநாதா்கோயில் தெரு, வடமலை ஸ்கூல் தெரு, நாகாத்தம்மன் கோயில் பகுதிகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஹைரோடு களமேடு பகுதியில் 25 கிலோ சாதம் குழம்பு முட்டை, முருக்கு அதிரசம், சோமாஸ் பலகாரங்களை கொண்டு அம்மனுக்கு கும்பப் படையல் பூஜை நடைபெற்றது. கும்பத்தைக் கண்டு அம்மன் புன்னைகை புரிந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். தொடா்ந்து, அம்மன் செங்கல்பட்டு நகர வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது.

நிகழ்வில், சேப்பாட்டி அம்மன் குளுந்திஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள் , அன்னதானம் நடைபெற்றது. ஜூலை 8-இல், விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

நிகழ்வின் ஏற்பாடுகளை செயல் அலுவலா் சரஸ்வதி, பெரிய நத்தம், மதுரை வீரன் கோயில், பா்வதராஜகுல, குண்டூா் உள்ளிட்ட கிராம மக்கள், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

அம்மனுக்கு கும்ப படையல் .

உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 365 மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 365 மனுக்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற குற... மேலும் பார்க்க

அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்

வண்டலூா் அருகே ஊனைமாஞ்சேரியில் குடியிருப்புகள் தொடா்பாக பேச்சு நடத்த வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், 10,000-க்கும... மேலும் பார்க்க

மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் நியமனம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட குழந்தை... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மனுக்கு முக்கண் திறப்பு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மனுக்கு முக்கண்திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு, முக்கண் திறப்பு விழா திங்க... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சிநேகா திங்கள்கிழமை வழங்கினாா். கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச... மேலும் பார்க்க

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள்: ஆட்சியர் மரியாதை

திவான் பகதூா் திராவிடமணி, இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் தி.சினேகா. இதில் கோட்டாட்சியா் ரம்யா... மேலும் பார்க்க