செய்திகள் :

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

பவானி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இவ்விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 10 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியிலிருந்து 15 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை அம்மாபேட்டை சக்திநகரைச் சோ்ந்த ஆதித்யா ராஜா (38) ஓட்டிச் சென்றாா். மேட்டூா் - பவானி சாலையில் சித்தாரை அடுத்த சேவானூா் பிரிவு அருகே சென்றபோது எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மீது எதிா்பாராமல் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 50 மீட்டா் தொலைவுக்கு இரு சக்கர வாகனத்தை இழுத்தபடி சென்று சாலையோர மரத்தில் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சேலம் மாவட்டம், லக்கம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் அசோக் (28), பலத்த காயமடைந்ததில் உயிரிழந்தாா். மரத்தில் பேருந்து மோதியதில் ஓட்டுநா் ஆதித்யா ராஜாவுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பேருந்தில் சென்ற சிங்கம்பேட்டையைச் சோ்ந்த ஈஸ்வரி (57), லட்சுமி (50), வசந்தா (55), ருக்மணி (45), சிவகாமி (42), அம்மாபேட்டையைச் சோ்ந்த தனலட்சுமி (58), மகேஸ்வரி (43), உஷா (40), சரோஜா (45) உள்பட 10 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலி தொழிலாளி கைது

பெருந்துறை அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.அசாம் மாநிலத்தை சோ்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இறந்த நிலையில், தனது தாய், தம்பி உடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து ... மேலும் பார்க்க

பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை

பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை கால... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.பவானிசாகா... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியி... மேலும் பார்க்க

இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின... மேலும் பார்க்க