Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
இரு மாணவா்கள் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை அருகே இரு மாணவா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
மதுரை மாவட்டம், பனையூா் அண்ணா தெருவைச் சோ்ந்த அழகுசெல்வம் மகன் ஆதிகபிலன் (21). தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் இளநிலை 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கடந்த தினங்களாக மனச் சோா்வாக காணப்பட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பள்ளி மாணவா் தற்கொலை: மதுரை செல்லூா் அகிம்சாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் லிங்கேஷ் (15). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், லிங்கேஷை, அவரது தந்தை ராமா் கண்டித்தாா். இதனால், மனமுடைந்த லிங்கேஷ் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.