இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!
இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
जीवन में बहुत दिलचस्प अनुभव हुए हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2025
लेकिन कभी 'मृत लोगों' के साथ चाय पीने का मौका नहीं मिला था।
इस अनोखे अनुभव के लिए, धन्यवाद चुनाव आयोग! pic.twitter.com/Rh9izqIFsD
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை.
இந்த தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் ஆர்ஜேடி கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்திருந்தும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

For this unique experience thank you Election Commission: Rahul Gandhi X post
இதையும் படிக்க |வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்