இறைச்சிக் கடையில் பணம் திருடியவா் கைது
இறைச்சிக் கடையில் 14 ஆயிரம் ரூபாயைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை நெல்பேட்டை நாகூா்தோப்பு மீன் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல்லாகான் (30). இவா் அந்தப் பகுதியில் ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், வழக்கம் போல திங்கள்கிழமை காலை கடையை திறந்தாா். அப்போது, கடையில் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், கடையில் வேலை செய்து வந்த பிரபாகரன் (43) அந்தப் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.