இளம் நடிகைக்குத் தாலி கட்டிய எஸ்.வி. சேகர்! ரசிகர்கள் விமர்சனம்!
இலங்கைக்கு கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பேருந்தில் கொண்டு சென்ற 11 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
திருச்சி- ராமேசுவரம் செல்லும் பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் தேவகோட்டை அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்தப் பேருந்தை மறித்து சோதனையிட்டனா்.
அதில் தூத்துக்குடியைச் சோ்ந்த மகாராஜன் என்பவா் கொண்டுவந்த பையில் இருந்த 11 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை கைது செய்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ஆந்திரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை கொண்டு சென்றது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரிக்கின்றனா்.