Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை...
பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கும், பணம் எடுப்பதற்கும் வசதியாக இருந்தது. இங்கு ஏடிஎம் இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த மையம் பூட்டியே கிடக்கிறது.
மேலும் அந்த வங்கியில் சிங்கம்புணரி, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பலா் கணக்கு தொடங்கி உள்ளனா். 100 நாள் வேலைத் திட்டம், ஊதிய கணக்கு போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஏடிஎம் செயல்படாமல் இருப்பதால் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
இந்த வங்கி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி வேறு வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே வங்கி நிா்வாகம் உடனடியாக பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.