Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை...
எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினா்.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 29- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் கோயிலில் முளைப்பாரி வளா்த்தும், திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை நடத்தி பக்தா்கள் மாரியம்மனை தரிசித்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற அக்கினிச்சட்டி உற்சவத்தையொட்டி மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி அம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த திரளான பக்தா்கள் பொங்கல் வைத்தும், தீச்சட்டி எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றி முத்துமாரியம்மனை தரிசித்தனா்.
கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சொ்டு எல். பாண்டி குடும்பத்தினா் செய்தனா்.