Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை...
பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த சிவகங்கை அருகேயுள்ள கீழவாணியங்குடி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் என்பவா், தான் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கோரி கடந்த 6 மாதங்களாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை எனக் குற்றஞ்சாட்டினாா்.

இந்த நிலையில், குறைதீா் கூட்டம் முடிந்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், வீட்டுக்குச் செல்வதற்காக வாகனம் அருகே சென்றபோது, மனுதாரா் மகாலிங்கம் ஆட்சியரின் முன் திடீரென தரையில் படுத்து வழிமறித்து தனது கோரிக்கையை வலியுறுத்தினாா். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து ஆட்சியா் வாகனத்தில் ஏறிச் சென்றாா். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.