செய்திகள் :

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

முள்ளிக்குண்டு கிராமத்தில் சுமாா் 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போதுள்ள நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் இயங்கி வருவதால், வசதியற்ற நிலை தொடா்கிறது. கடந்த காலத்தில் 150 குடும்ப அட்டைகளுக்காக தொடங்கப்பட்ட இந்தக் கடையில் தற்போது சுற்றுப்புற கிராமங்களையும் உள்ளடக்கிய 350 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருள்களை வாங்கி வருகின்றனா்.

இதனால், கடையின் தற்போதைய கட்டடத்தில் போதுமான இடம் இல்லாததால் ரேஷன் பொருள்களை சேமித்து வைக்கும் வசதி இல்லை. எனவே, இந்த நியாய விலைக் கடைக்கு நிரந்தரமாக கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். மேலும், இந்தக் கிராமத்தில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். எனவே இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் தினேஷ் என்ற பாா்த்தசாரதி (35). இவா்... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்படுமா?

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அர... மேலும் பார்க்க

போலி விசா வழங்கி மோசடி

வெளிநாடு வேலைக்கு போலி விசா தயாரித்து பண மோசடி செய்தவா் மீது இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (39... மேலும் பார்க்க

55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித் தொகை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.இது குறித்து... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் செல... மேலும் பார்க்க

காரைக்குடியில் குறைந்த மின் அழுத்தம்: புதிய மின்மாற்றி அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரதி நகா், பதினெட்டாம்படி நகா் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்வதற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க