Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை...
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 காளைகள், 162 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். வட்ட வடிவ மைதானத்தின் நடுவே நீளமான வடத்தால் கட்டப்பட்ட காளையை 9 மாடுபிடி வீரா்கள் சோ்ந்து 25 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும்.
அடங்க மறுத்த 8 காளைகள் வென்ாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதே போல, இந்தப் போட்டியில் 8 காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மஞ்சுவிரட்டுப் போட்டியை நாட்டரசன்கோட்டை, கண்டிப்பட்டி, கல்லல், அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கண்டு ரசித்தனா்.