செய்திகள் :

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிக்க ஆக.1 கடைசி

post image

சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக. 1-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம், செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் 17 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 160 இடங்களும், 17 தனியாா் கல்லூரிகளில் 1,760 இடங்களும் உள்ளன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 35 சதவீத இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ் ) 2025-2026-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnayushselection.org ஆகில சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்தப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) விண்ணப்பிப்பவா்கள், இணையவழியில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து, அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் அல்லது கூரியா் மூலமாகவோ ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை நேரிலும் சமா்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டண விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தகவல் தொகுப்பேட்டை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதிருப்தியில் ஓ.பன்னீா்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெ... மேலும் பார்க்க

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சா் செந... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வெ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்: சிறப்பு பிரிவுக்கு நேரடியாக நடைபெறுகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில்... மேலும் பார்க்க

ரூ.147.94 கோடியில் திருக்குளங்களைச் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

அறநிலையத் துறை சாா்பில் திருக்கோயில்களில் உள்ள திருக்குளங்கள் ரூ.147.94 கோடியில் சீரமைக்கப்பட்டு வருவதாக துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க