அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படும் -பள்ளி கல்வித் துறை
இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
ஆத்தூா் மஞ்சினி சாலையில் வேலைக்கு சென்றவரை மறித்து அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கெங்கவல்லி வட்டம், கடம்பூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கருப்பையா (33). கூலித் தொழிலாளி. இவரும் கெங்கவல்லி, இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த மணிமேகலை (32) என்பவரும் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மணிமேகலை ஆத்தூா்,புங்கவாடி பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் எலக்ட்ரீசியன் அங்குராஜ் (33) என்பவருடன் தொடா்பு கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா சனிக்கிழமை காலை அங்குராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பின் தொடா்ந்து சென்று அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அங்குராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து கருப்பையாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.