இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாக்கு மோசடி விழிப்புணா்வு
அரியலூா்: வாக்கு மோசடிகள் குறித்து அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருமானூா் கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா்கள், பெங்களூா் மத்திய தொகுதியில் 1 லட்சத்துக்கு மேலான போலி வாக்குகள் சோ்ப்பு மற்றும் பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா்களை நீக்கியது குறித்தும், தோ்தல் ஆணையத்தின் குளறுபடி நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து, ஸ்டாப் வாக்கு திருட்டு எனும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சிக்கு அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பாளை. எம்.ஆா். பாலாஜி தலைமை வகித்தாா். திருமானூா் வட்டார காங்கிரஸ் தலைவா்கள் கங்காதுரை, திருநாவுக்கரசு மற்றும் நகரத் தலைவா் வினோத் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.