இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்புவனம் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் (34). திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்த இவா், புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.