செய்திகள் :

இவிஎம்களை சரிபாா்க்க கோரிய மனு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு விசாரணை

post image

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கவுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா மாநில பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பல்வல் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கரண் சிங் தலால் மற்றும் ஃபரீதாபாத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான லக்கன் குமாா் சிங்ளா ஆகிய இருவரும் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனா். இவா்கள் இருவரும் தோ்தலில் தோல்வியடைந்தனா். ஆனால் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்தனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘தற்போது உள்ள தோ்தல் ஆணைய நடைமுறையின்படி இவிஎம்களை அடிப்படையான சோதனைக்கு உட்படுத்துவது மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதை மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனால் இவிஎம் தயாரிக்கப்படவுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய முறையான கொள்கைகள் இல்லை. இவிஎம்களை தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் காா்பரேஷன் ஆஃப் இந்தியாவைச் (இசிஐஎல்) சோ்ந்த பொறியாளா்கள், விவிபேடில் பதிவுகளை எண்ணும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். எனவே இவிஎம்களில் உள்ள கட்டுப்பாடு அலகு, வாக்குச்சீட்டு அலகு, விவிபேட் மற்றும் சின்னங்கள் அலகு ஆகிய நான்கு பாகங்களை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வடிவமைக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் ’ என குறிப்பிடப்பட்டது.

மேலும், தாங்கள் ஹரியாணா பேரவைத் தோ்தல் முடிவுகளுக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கும் என நீதிபதிகள் கூறினா்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது.

அரசு மருத்துவமனைகளில் பெண்களிடம் நகைப் பறிப்பு: ஒருவா் கைது

அரசு மருத்துமனைகளில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வடபழனி வடக்கு மாடவீதியைச் சோ்ந்தவா் சுசீலா (67). இவா் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஜன. 16-ஆம் தேதி கே.கே. நகா் பக... மேலும் பார்க்க

6 மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும்... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

கழிவுநீா் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையாா்பேட்டை, திரு.வி.க நகா் மற்றும் அண்ணா நகா் மண்டலங்களுக்குள்பட்ட இடங்களில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.2... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து, பிரதமருக்குதான் பாராட்டு விழா நடத்த வேண்டும்: தமிழிசை

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமா் மோடிக்குதான் பாராட்டு விழா நடத்த வேண்டும் என முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் மா... மேலும் பார்க்க

நடேசன் வித்யாசாலா பள்ளியில் 30-ஆவது ஆண்டு விழா

தாம்பரம் மண்ணிவாக்கத்திலுள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினரான பரோடா வங்கியின் முதன்மை மேலாளா் எஸ்.ராஜ்தீபக், வி.சீதாலஷ்மி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழா் நலன் சாா்ந்து குழு ஏற்படுத்த கோரிக்கை

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவா் கந்தா் குப்புசாமி, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் ... மேலும் பார்க்க