செய்திகள் :

'ஈரான் மீது குண்டு வீசப்படும்' - ட்ரம்ப் மிரட்டலின் பின்னணி?

post image

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம்தான் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. பிற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அவை ஐ.நா-வின் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் புதிதாக தயாரிக்கவும் முடியாது. இந்தசூழலில்தான் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதில்தான் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

அமெரிக்கா- ஈரான்

ட்ரம்ப் - முதல் முறை அதிபரான போது...

இந்த பிரச்னை அமெரிக்க அதிபராக முதல்முறையாக ட்ரம்ப் பதவியேற்ற போதே தீவிரமடைந்திருந்தது. அப்போது அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உத்தரவிட்டார். பதிலுக்கு அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இப்படியான பரபரப்பான சூழலில்தான் ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவர் காசிம் சுலைமானி ஆளில்லா விமானம் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சுலைமானியின் ஆதரவாளர்கள் அப்போது அமெரிக்கா அதிபராக இருந்த ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

மீண்டும் ட்ரம்ப்

இந்தசூழலில்தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றிருக்கிறார். முன்னதாக அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதற்கு பின்னால் ஈரான் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. பிறகு பேசிய ட்ரம்ப், "இந்த சம்பவத்துக்கு பின்னால் ஈரான் உள்ளது. அவர்கள் என்னை படுகொலை செய்ய முயன்றால் அந்த நாடு இருக்காது. மொத்தமாக அழிக்கப்படும்" என கொதித்திருந்தார்.

இதற்கிடையில் அமெரிக்கா அதிபரான பிறகு இஸ்ரேலுடன் கைகோர்த்துக்கொண்டு ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது, அமெரிக்கா. மேலும், 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்' என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

இஸ்ரேல் - ஈரான்

இதுதொடர்பாகப் பேசிய ட்ரம்ப், “நான் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். அப்படியில்லை என்றால் நாம் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அது அவர்களுக்கு பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் ஈரான் எடுக்கப்படக்கூடாது. அப்படி எடுத்தால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்' என எச்சரித்திருந்தார். இதற்கு ஈரான், 'எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை' என அறிவித்தது. இதில் ட்ரம்ப் கடுப்பாகிவிட்டார்.

நிலைமை மிகவும் மோசமாகிவிடும்

பின்னர் அவர் அளித்த பேட்டியில், "ஈரான் சமரசம் செய்து கொள்ளும் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளேன். ஏனென்றால் நாம் ராணுவ பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர்கள் யாரும் இறக்கக்கூடாது" என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை அமெரிக்கா நிறுத்தும் வரை அவர்களுடன் நாங்கள் பேசுவதற்கு தயாராக இல்லை" என்றார். மேலும் அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன், "அமெரிக்கா எங்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது சட்டத்தை மீறும் நடவடிக்கை. மேலும் இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இப்படி எங்களின் மக்களுக்கு செய்தவர்கள் வெற்றிபெற்றதில்லை" என தெரிவித்திருந்தார். மேலும் சீனா, ரஷ்யா உதவியுடன் அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வெள்ளை மாளிகை | ட்ரம்ப்

இதற்கு முன் பார்த்திராத மாதிரியான தாக்குதல்

இந்தசூழலில் ட்ரம்ப் அளித்த பேட்டியில், "அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் விரைவில் அவர்கள் உடன்படிக்கை எட்ட வேண்டும். இல்லையென்றால் ஈரான் மீது குண்டு வீசப்படும். இதற்கு முன் அவர்கள் பார்த்திராத மாதிரியான தாக்குதலாக அது இருக்கும். கூடவே அதிக வரிகளும் விதிக்கப்படும்" என்றார்.

இதற்கு பதிலளித்த ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், "அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை. அதேநேரத்தில் ஓமன் வழியாக மறைமுகப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் நாங்கள் பேச்சுவார்த்தையைத் தவிர்க்கவும் விரும்பவில்லை. ஏற்கனவே எங்களுக்கு அமெரிக்கா கொடுத்த உறுதிமொழிகளை மீறிவிட்டது. அதனால்தான் இப்போது பிரச்னை. எனவே அவர்கள் நம்பிக்கையாக இருக்க முடியும் என நிரூபிக்க வேண்டும்" என்றார்.

இதற்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, "ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கும் ஆற்றலைப் பெறுவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது. ஈரானுடன் ஒப்பந்தம் பற்றிப் பேச அதிபர் ட்ரம்ப் தயாராக இருக்கிறார். இதில், ஈரானுக்கு விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார். அவர் வேறு விஷயங்களைத் தேர்ந்தெடுத்தால் அது இரானுக்கு நல்லதல்ல" என தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலும், 'ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது' என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஈரான் தனது முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. இதானால் ராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்கிறீர்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்!

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!* "எப்படியாவது இந்துக்கள் - ... மேலும் பார்க்க

TVK : 'இந்திய அரசியலமைப்பின் மீதான களங்கம்!' - வக்ஃபு திருத்த மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.Vijayஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ - சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுக-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரியில் மத்திய அரசின் 50% சதவிகித நிதிப் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி, கடந்த காங்கிரஸ் ஆட்சி... மேலும் பார்க்க