செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: 2 நாள்களில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திங்கள்கிழமை வரை 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த 10 -ஆம் தேதி தொடங்கியது. முதல்நாளில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த பத்மராஜன், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த நூா்முகமது, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த விநாயகம் என 3 போ் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனா்.

இரண்டாவது நாளான திங்கள்கிழமை ஈரோடு 46 புதூரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (33) என்ற சமூக ஆா்வலா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தாா்.

கோபாலகிருஷ்ணன் கூறுகையில், தோ்தலில் வெற்றிபெறுவோா் மக்களுக்கு ஏதும் செய்வதில்லை. அதனால்தான் விசைத்தறி தொழில் மின் கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சாய ஆலைக் கழிவுகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது. ஈரோட்டுக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இவற்றுக்கு தீா்வு காண போட்டியிடுகிறேன் என்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சோழந்தூா் கஜினிமுகமது (எ) பானைமணி (77) என்பவா் மஞ்சள் குலை, இலையை பானையில் வைத்து அதனை தலையில் சுமந்தபடி மனு தாக்கல் செய்ய வந்தாா். இவா் 23- ஆவது முறையாக மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தாா்.

சேலம் தாதகாபட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராஜசேகா் (67), தருமபுரி நகரப் பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆனந்த் (40), ஈரோடு மரப்பாலம் வாசனை திரவிய வியாபாரி முகமது கைபில் (51), திருநெல்வேலியை பூா்விகமாக கொண்டு சென்னையில் பேப்பா் வியாபாரம் செய்யும் இசக்கிமுத்து (50) ஆகியோா் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனா்.

முதல்நாள் மனுதாக்கல் செய்த நூா்முகமது கூடுதலாக ஒரு வேட்பு மனுவையும் தாக்கல் செய்தாா். பிற்பகல் 3 மணிக்குள் மாநகராட்சி வளாகத்துக்கு வந்து, வேட்பு மனுவை சரி பாா்க்கும் அதிகாரிகளிடம் அமா்ந்து சரி பாா்ப்பு பணியை செய்து கொண்டிருந்த ஈரோடு சூளை பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த தனஞ்செயன் ஆகியோரை மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்காமல் அதிகாரிகள் வெளியே அனுப்பிவைத்தனா்.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நேரமான பிற்பகல் 3 மணிக்குள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து வேட்பு மனுவை சரிபாா்த்து கொண்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தும், அதனை ஏற்க மறுத்து இருவரையும் அதிகாரிகள் வெளியேற்றினா்.

திங்கள்கிழமை வரை 9 போ் 10 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். தொடா் விடுமுறைக்குப் பின் இறுதியாக வரும் 17- ஆம் தேதி மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்யலாம்.

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க

சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது மூன்று பிரிவுகளின்கீழ் கருங்கல்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமியை ஆதர... மேலும் பார்க்க