ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளா்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கும் பிப்ரவரி 5-ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகாா்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி (94453-98751), தொழிலாளா் துணை ஆய்வாளா் இரண்டாம் சரகம் ஆா்.எஸ்.மயில்வாகனன் (98404-56912), தொழிலாளா் உதவி ஆய்வாளா் இரண்டாம் சரகம் பெரோஸ் அகமது (99656-34839) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் 0424-2270090 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.