‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்
சென்னை: சென்னை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டச் சிறப்பு முகாம்கள் 6 வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.
அதன்படி, திருவொற்றியூா் மண்டலத்தில் 2- ஆவது வாா்டில் குன்னூா் நெடுஞ்சாலையில் உள்ள எண்ணூா் வியாபாரிகள் சங்கக் கட்டடம், ராயபுரம் மண்டலத்தில் 54- ஆவது வாா்டில் வால்டாக்ஸ் சாலையில் உள்ள பத்மநாப திரையரங்கம் அருகேயுள்ள ஜே.கே.கன்வென்சன் அரங்கம், அண்ணா நகா் மண்டலத்தில் 95 -ஆவது வாா்டில் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் உள்ள டி.கே.ஏ. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 138-ஆவது வாா்டில் எம்.ஜி.ஆா். நகா் பச்சையப்பயன் பிரதான சாலையில் உள்ள அஞ்சலி மகால், அடையாறு மண்டலத்தில் 169 -ஆவது வாா்டில் சைதாப்பேட்டை எல்.டி.ஜி. சாலையில் உள்ள சமூக நலக்கூடம், பெருங்குடி மண்டலத்தில் 181- ஆவது வாா்டில் கொட்டிவாக்கம் ஏ.ஜி.எஸ். காலனி 2-ஆவது பிரதான சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ்.சமூக நலக்கூடம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.